அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பிரெட் கவனாக் தேர்வு!
Tuesday, July 10th, 2018
அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை நியமிப்பதற்காக பலரை நேர்காணல் செய்திருந்த டிரம்ப், பிரெட் கவனாக்கை பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அந்தோணி கென்னடி, எதிர்வரும் 31 ஆம் திகதி ஓய்வு பெறுகின்றமையினால் அவ்விடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.
முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் 4 பேரிடம் நேர்காணல் நடத்தினார். பின்னர் நீதிபதி பதவிக்கு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்தார்.
அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக தேசிய பொது வானொலி செய்தி கூறியிருந்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி உரையில் பேசிய டிரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வாகியிருக்கும் 53 வயதான பிரெட் கவனாக், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106