ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்பு : அமைச்சர் மஹிந்த அமரவீர
Sunday, July 8th, 2018
நாட்டில் பழைமை வாய்ந்த சிறிய குளக் கட்டமைப்பை சீர் செய்வதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்காக அரசாங்கம் 900 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் குளக்கட்டமைப்பில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உண்டு.
இவற்றை சீர் செய்வதன் மூலம் முறையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். விவசாய அமைச்சின் ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கிராமசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக குளங்களை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Related posts:
மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!
இன்று மின்தடை!
இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தும் - சுற்றுச்சூழ...
|
|
|


