மீண்டும் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு!
Friday, July 6th, 2018
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும், 95 ஒக்டைன் வகை பெட்ரோல் 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், டீசலின் விலை 9 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டைன் 92 வகை பெட்ரோலின் புதிய விலை 146 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெட்ரோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இயுரோ 04 வகை பெட்ரோல் 158 ரூபாவாகவும், இயுரோ 03 வகை பெட்ரோல் 149 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் (இயுரோ 04) புதிய விலை 129 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா மைல் டீசல் 122 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலை நேற்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106