யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுமுறைகள் ரத்து!
Wednesday, July 4th, 2018
யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினது விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டவிரோத குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் 7ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
கட்டுப்பாடின்றித் தொடரும் வன்முறைகுள் சிக்கித் தவிக்கும் குடாநாடு - பரிகாரம் காணப்படுமா என மக்கள் ஏக...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!
|
|
|


