ஹெரோயினுடன் யாழ் நகரில் இளைஞன் கைது!
Saturday, January 11th, 2025
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் கைதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
Related posts:
வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
நிகழ்காலத்துடன் எதிர்காலத்தையும் வெற்றிகொள்ள ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்தை வலுப்படுத்துங்கள் – தமிழ்...
87 ஆயிரத்தைக் கடந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை!
|
|
|


