விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர், மரின் சிலிச் வெற்றி!

Tuesday, July 3rd, 2018

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106