ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் – ஜனாதிபதி சந்திப்பு!
Friday, June 29th, 2018
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு பணி அதிகாரி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு பொலன்னறுவையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு பணி அதிகாரி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரிலேயே ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் இடம்பெறும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் பயிற்சிக்காக கொள்ளுப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு கல்லூரிக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து ஜனாதிபதி பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன் இக்கல்லூரிக்கு நிபுணத்துவம் வாய்ந்த விரிவுரையாளர்களை அனுப்புவதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தார்.
ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட், பாகிஸ்தானின் 17வது பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி ஆவார். இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியுமாவார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷாஹிட் அஹ்மட் ஹஸ்மத்தும் கலந்துகொண்டார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106