நோயாளர், முதியோர் கொடுப்பனவுகளை பிரதேச செயலகத்தில் பெறுவோர் அவதி!
Wednesday, June 27th, 2018
தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களில் முதயோர்கள் அவதிப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் 15 ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவிப் பணம் மற்றும் நோயாளருக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெற வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதியோர்கள் மற்றும் நோயாளர்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பில் முதியவர் ஒருவர் தெரிவிக்கையில்:
நான் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்து காலை 8 மணிக்கு பிரதேச செயலகம் வந்தேன். அதிக மக்கள் வருகை தந்ததன் காரணமாக மதியம் 12 மணி ஆகியும் பணத்தைப் பெற முடியவில்லை.
தபால் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் நாம் எமது தபால் நிலையத்தில் இலகுவாக பணத்தைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106