கனகரத்தினம் மத்தியை வீழ்த்தியது யாழ். மத்தி!

Saturday, June 23rd, 2018

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான தொடரில் அண்மையில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது. யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 61.2 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. சன்சயன் 200 ஓட்டங்களைப் பெற்றார். சாரங்கன் 39, கவிதரன் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லஜிந்தன், சதூர்ஜியன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய முதலாவது இன்னிங்ஸிக்காகத் துடுப்பெடுத்தாடிய கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய அணி 100 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. பந்துவீச்சில் சயந்தன் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106