20 ஆயிரம் கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்ய பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!
Saturday, June 23rd, 2018
பனை அபிவிருத்திச் சபையால் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்ய சபையின் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது சபையில் உற்பத்தி நிலையங்களில் இருந்து பத்தாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சிங்கராயர் நகர் மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் உற்பத்தி நிலையங்கள் ஊடாக கூடுதலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டும் வருகின்றது. சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை வெல்லத்தை இம்முறையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பனை வெல்லத்திற்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
Related posts:
குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகார...
நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
|
|
|


