பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!
Tuesday, December 22nd, 2020
பிரித்தானியாவில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு பின்னர் பிரித்தானியாவில் இருந்து வரும் சகல விமானங்களுக்கும் இலங்கையில் தரையிறக்க அனுமதியளிக்கப்படாது என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையி...
போதைப்பொருள் பாவனை - வாகன சாரதிகளை கண்காணிக்கும் அதிநவீன உபகரணம் இலங்கையில்!
நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவத வெளியானது அதிவி...
|
|
|


