முதியோருக்கான கொடுப்பனவுகளை சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு!

Saturday, June 23rd, 2018

தென்மராட்சிப் பிரதேசத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவின் ஜுன் மாதக் கொடுப்பனவு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்கும் முகமாக மாற்று ஒழுங்குகளைப் பிரதேச சமூக சேவைகள் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

கொடுப்பனவுகள் கைதடி கொடிகாமம் வரணி ஆகிய பிரதேசங்களில் இயங்கும் சமுர்த்தி வங்கிகளில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதடி கைதடி வடக்கு தச்சன் தோப்பு உப அஞ்சல் அலுவலகங்களில் கொடுப்பனவைப் பெற்றவர்கள் கைதடி சமுர்த்தி வங்கியிலும் கொடிகாமம் கச்சாய் விடத்தற்பளை மிருசுவில் உப அஞ்சல் அலுவலகங்களில் கொடுப்பனவுகளைப் பெற்றவர்கள் கொடிகாமம் சமுர்த்தி வங்கியிலும் வரணி மந்துவில் ஆகிய உப அஞ்சல் அலுவலகங்களில் கொடுப்பனவுகளைப் பெற்றவர்கள் வரணி சமுர்த்தி வங்கியிலும் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் காலப் பகுதிக்குள் கொடுப்பனவுகளைப் பெற முடியாதவர்கள் பிரதேச செயலகத்திலும் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாமெனவும் பணம் பெறும் அத்தாட்சி அட்டை தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை அவசியம் சமர்ப்பித்து கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் பிரதேச செயலர் தேவந்தினி பாபு அறிவித்துள்ளார். அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106