மருந்துகளின் விலைகளைக் குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
Thursday, June 21st, 2018
புற்று நோய் நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் அதிக விலையுடைய மருந்துகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 48 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அதிக விலையுடைய மருந்துகளின் விலைகளை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட பின்னர், தனியார் மருத்துவமனைகளில் விலை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கையிலும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்று!
சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசம்!
சர்வதேச தாய்மொழி தினம் இன்று - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் விசே...
|
|
|


