துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

Tuesday, June 19th, 2018

துனிசியாவுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. வோல்கோகிராடில் நடந்த ‛ஜி’ பிரிவு லீக் போட்டியில், உலகின் ‛நம்பர் 12′ இங்கிலாந்து அணி, 21வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை சந்தித்தது.

போட்டியின் 11வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், அசத்தல் கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் துனிசியா அணியின் முயற்சிக்கு 35வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் பெர்ஜானி ஷாசி கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் போட்டி 1-1 என சமநிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி உடனடியாக பலனளிக்கவில்லை. கூடுதல் ஸ்டாபேஜ் நேரத்தில் மீண்டும் அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், வெற்றிக்கான கோலை அடித்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106