சந்திமால், ஷானக துணையுடன் அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!

Friday, June 17th, 2016

இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி டப்லினில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக குஷால் பெரேரா, குணத்திலக களமிறங்கினர். குணத்திலக 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

மற்றொரு தொடக்க வீரரான குஷால் பெரேரா 32 ஓட்டங்களில் வெளியேறினார். இதன் பின்னர் குஷால் மெண்டிஸ், சந்திமால் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர்.

இதனால் இருவரும் அரைசதம் கடந்தனர். குஷால் மெண்டிஸ் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் சந்திமாலுடன் இணைந்த அணித்தலைவர் மேத்யூஸ் நிதானத்தை தொடர, மறுமுனையில் அசத்திய சந்திமால் சதம் விளாசினார்.

மேத்யூஸ் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். கடைசி நேரத்தில் தசன் ஷனக அதிரடி காட்டி 19 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த பிரசன்னா (0), உபுல் தரங்கா (7), தனன்ஜெய (3) ஆகியோர் சொற்ப ஓட்டங்களே எடுத்தனர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சந்திமால் 107 பந்தில் 100 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 303 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து 304 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி 40.4 ஓவர்களில் 216 ஓட்டங்களை மட்டுமே எடுத்து D/L முறைப்படி 76 ஓட்டங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

அயர்லாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய போர்டர்ஃபீல்ட் சிறப்பான துவக்கத்தை அளித்தார். அவருடன் களமிறங்கிய ஸ்டிர்லிங் 34 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தசன் ஷனக பந்துவீச்சில் வெளியேறினார்.

அவரை அடுத்து களமிறங்கிய ஜாயிஸ்(9), ஆண்டர்சன்(7) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்க ஓபிரியான் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்தார்.

இதனிடையே மழை குறுக்கிடவே வெற்றி இலக்கை 293 ஓட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்ததால் அயர்லாந்து அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் இலங்கை அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் தசன் ஷனக 5 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106