பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு பதிலாக விக்ரமரத்ன நியமனம்!
Monday, June 18th, 2018
பொலிஸ் மா அதிபராக மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சென்றுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை சீ.டீ. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விபத்துக்களில் கைகளை இழந்தவர்களுக்கு செயற்கைக் கரம் !
பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு!
இன்றும் ஐந்து மணி நேர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


