ஆப்கானிஸ்தானில் பாரிய கார்குண்டுத் தாக்குதல்!
Monday, June 18th, 2018
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
றமழான் பெருநாளை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலீபான்களுக்கும் இடையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளும், தலீபான்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் இந்த கார் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அனைத்து தரப்புக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் - இந்திய இராணுவத்திரரிடையே கடும் மோதல்!
மெக்சிக்கோவில் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி!
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று பணியாளர்க...
|
|
|


