ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
Friday, June 15th, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 13 இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு நபர்களுக்கு அதன் பயன்கள் கிடைத்து வருகின்றன.
இருப்பினும் இந்த நிவாரணத்தை வழங்குவதற்குப் பொருத்தமானவர்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும் தற்போது சமுர்த்திப் பயன்கள் கிடைக்காத வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்கள் பலவற்றிற்கு இந்தப் பயன்கள் கிடைப்பதில்லை என்ற தகவல் பதிவாகியுள்ளது.
இதற்கமைவாக சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் சிபார்சுடன் சமுர்த்திப் பயன்கள் கிடைக்கவேண்டிய குறைந்த வருமானத்தைக் கொண்ட 1 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத்தை விரிவுபடுத்துவதற்காக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பி.ஹரிசன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106