உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்குத் தயார் – சாலா அதிரடி அறிவிப்பு!

Thursday, June 14th, 2018

ரஷ்ய உலகக்கிண்ணத் தொடரில் விளையாடத் தயார் என்று அறிவித்தார் எகிப்து அணியின் நட்சத்திரவீரர் சாலா. ஐரோப்பிய கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதியாட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ரியல்மட்ரிட் லிவர்பூல் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ரியல்மட்ரிட் அணியின் தலைவர் ராமோஸிடம் மோதுண்டு நிலத்தில் வீழ்ந்தார் சாலா. இதனால் அவரின் தோள் பட்டையில் தசைக்கிழிவும் இலேசான எலும்பு முறிவும் ஏற்பட்டது.

சுமார் இரண்டு மாதங்கள் ஓய்விலிருக்க வேண்டும் என்று சாலாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் உலகக்கிண்ணத் தொடரில் எகிப்தின் சார்பாகப் பங்கேற்காத நிலைமை ஏற்படும் என்று கருதப்பட்ட நிலையில் மருத்துவர்களின் அறிவுரையைத் தாண்டி ரிஸ்க் எடுக்க முன்வந்துள்ளார் சாலா.

உலக்கிண்ணத் தொடருக்கான எகிப்து அணியுடன் ர~;யாவுக்குச் சென்ற அவர் உலகக்கிண்ணத் தொடரில் களமிறங்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

காயம் ஏற்பட்டது துரதி~;டவசமானது. நான் ர~;யா வந்ததே உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காகத்தான். நாங்கள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாடத் தகுதி பெற்ற பின்னர் நான் அணியில் இடம்பெறாவிடில் உண்மையிலேயே கடினமாக இருக்கும். கடவுள் உலகக்கிண்ணத் தொடரில் நான் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். கனவு நனவாகியுள்ளது என சாலா மேலும் தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106