உடற்பருமனைக் குறைத்துக்கொள்ள 24 மணி நேரமும் துரித ஆலோசனை – சுகாதார அமைச்சு !

Thursday, June 14th, 2018

மிதமிஞ்சிய உடற்பருமன் பிரச்சினை தொடர்பில் துரித ஆலோசனை வழங்க 24 மணிநேரமும் இயங்கும் தொலைபேசி சேவையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அளவுக்கு அதிகமான உடற்பருமனைக் குறைத்துக்கொள்வதற்கு துரித ஆலோசனை வழங்கக்கூடிய வகையில் இந்த தொலைபேசி சேவை அமுலாகிறது.

இந்த சேவை 24 மணித்தியாலமும் அமுலில் இருக்கும். இதனை தொடர்புகொள்ள அழைக்க வேண்டிய இலக்கம் 0710 107 107 என்பதாகும். இதனூடாக இலவச ஆலோசனைகளை பெற முடியும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவர்களையும் விசேட நிபுணர்களையும் நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய சுவசரிய நடமாடும் சுகாதார ஆலோசனை சேவையை சகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்கள் பணியாக முன்னெடுக்கின்றது.

ஜீன் மாதம் போஷாக்கு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருள் உடல் எடை குறைத்து சரியான வழியில் செல்வோம் என்பதாகும்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மக்களுக்கு மத்தியில் அளவுக்கு அதிகமான உடற்பருமன் என்பது சுகாதார நெருக்கடியாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயது வந்தோர் மத்தியில் சுமார் 17 சதவீதமானோர் உடல் எடைக்கு பொருத்தமற்ற வகையில் அதீத பருமன் மிக்கவர்களாக காணப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106