இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க டெஸ்ட் அணி வீரர்கள் அறிவிப்பு!
Tuesday, June 12th, 2018
இலங்கை – தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் டேல் ஸ்டெயின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெயின் விளையாடவில்லை.
ஆனால் தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாபிரிக்க அணியில் டேல் ஸ்டெயினும் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் காயமடைந்திருந்த மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடாவும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் பஃப் டு ப்ளெசி தலைமையிலான அணியில் ஹஷிம் அம்லா, டெம்பா பவூமா, க்வின்டன் டி காக், தியூனிஸ் டி ப்ரைன், டீன் எல்கர், ஹெய்ன்ரிக் க்ளாசென், கேசவ் மஹராஜ், ஐடன் மார்கிராம், லுங்கிசனி நிகிடி, வெர்னொன் ஃபிலென்டர், கிகிஸோ ரபாடா, தாப்ரீஸ் ஷம்ஸி, டேல் ஸ்டெயின், ஷான் வொன் பெர்க் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106