பேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்!
Tuesday, June 12th, 2018
அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு 41 நிமிடங்கள் நடந்தது.
இருவரும் சந்தித்துபேசிய பின்னர் டிரம்ப் கூறுகையில்-
வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாகஇருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
Related posts:
குற்றவாளிகளை முடிவுகட்ட அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ உத்தரவு!
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் : 82 பேர் உயிரிழப்பு!
கொரோனா அச்சுறுத்தல் : பூட்டான் முடங்குகிறது!
|
|
|


