இரு துருவங்களும் நேருக்கு நேர் சந்திப்பு: ஆரம்பமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்கள்!
Tuesday, June 12th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
சிங்கப்பூரில் செந்தோசா தீவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
குறித்த சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது அணுவாயுத சோதனையை நிறுத்தல் மற்றும் வடகொரியா மீதான தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
வரலாற்றில் முதற்தடவையாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் இடம்பெறும் இந்த சந்திப்பின் பொருட்டு சுமார் 2 ஆயிரத்து 500 ஊடகவியலார்கள் சிங்கப்பூர் சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

Related posts:
லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்...
வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே மு...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு!
|
|
|


