வாள்வெட்டு குழுவை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!

Monday, June 11th, 2018

கொக்குவிலில் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது. வாள்வெட்டை நடத்திய குழுவை பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்ற நிலையில் அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் குறித்த புகைப்படங்கள் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமரா மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts:


கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பொன்றுக்குள் நாம் தொடர்ச்சியாகச் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் பொருளாதா...
வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -வலி. மேற்கு பிரதேச ...