இந்திய பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்?
Saturday, June 9th, 2018
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யும் திட்டமொன்று தொடர்பில் அந்நாட்டு காவற்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவொன்றிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதமொன்றில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள பீமா கோரோகான் என்ற கிராமத்தில் கோரோகான் போரின் 200-வது ஆண்டு விழா கடந்த ஜனவரி 1-ம் திகதி அனுசரிக்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்காக பட்டியலின மக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் திடீரென கல் வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
இதனால் அமைதியாகத் தொடங்கிய கூட்டம் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, மகாராஷ்ட்ராவின் பல்வேறு பகுதிகளில் இந்த கலவரத்தைக் கண்டித்து போராட்டங்களும் கடையடைப்புகளும் நடத்தப்பட்டன.
இந்தக் கலவரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தக் கலவரத்துக்கு மாவோயிஸ்டுகள் சதியாக இருக்கலாம் எனக் கருதிய மகாராஷ்ட்ரா காவல்துறையினர், இதில் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்தனர்.
அதில் ஒருவரை டெல்லியிலும் மற்ற நான்கு பேரை புனேவிலும் கைது செய்தனர்.
டெல்லியில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் சோதனை நடத்திய காவற்துறைக்கு சில கடிதங்கள் கிடைத்துள்ளன.
அந்தக் கடிதத்தில், ‘ராஜீவ் கொலை போன்ற மற்றொரு நிகழ்ச்சி’ என்றும் சில ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களும் எழுதியிருந்ததாக மகாராஷ்ட்ரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது பிரதமர் தொடர்புடைய விஷயம் என்பதால், கடிதம் மற்றும் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் மகாராஷ்ட்ரா காவற்துறையினர் உளவுத்துறைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106