மோசமான அரசியல்வாதிகள் பதவிகளுக்கு வர வாக்காளர்களே காரணம் – திருமலை கருத்தரங்கில் சுட்டிக்காட்டு!
Friday, June 8th, 2018
வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிட்டன் தலைமையில் நடைபெற்றது.
வாக்குரிமையானது முக்கியத்துவமிக்கது. தனி நபர்கள் தமது வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பெரிதாகப் பொருட்படுத்துவது கிடையாது. அதற்கு அது தொடர்பில் போதிய தெளிவின்மையே காரணமாகும். 18 வயது பூர்த்தியான சகல இலங்கைப் பிரஜைகளும் வாக்காளர் பதிவு படிவத்திலே முறையாக பதிவு செய்தல் வேண்டும். வாக்குரிமையை விட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதன் மூலம் ஒரு பிரஜைக்கு பல நன்மைகள் கிடைப்பதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா தெரிவித்தார்.
வாக்காளர் இடாப்பிலே பதிவு செய்வதோ வாக்களிப்பதோ இலங்கையில் கட்டாயப்படுத்தப்படாமையின் காரணமாக மக்கள் அது தொடர்பில் முக்கியத்துவம் காட்டுவதில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவற்றில் வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப் பதிவு மற்றும் வாக்குப் பதிவு செய்தல் கட்டாயப்படுத்தப்பட்டதனால் அங்கு அதன் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.
இலங்கையில் சராசரியாக 65 வீதமான வாக்குகளே அளிக்கப்படுகின்றன. 35 வீதமான மக்கள் தமது வாக்குகளை பிரயோகிக்காமை காரணமாக பொருத்தமற்றவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர சந்தர்ப்பம் எற்படுவதாகவும் இதன்போது திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், திருகோணமலை கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், மாணவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106