தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டிடம் கொழும்பில்!
Thursday, June 7th, 2018
சீன நிறுவனம் ஒன்று தெற்காசியாவில் மிக உயரமான கட்டிடத்தை கொழும்பில் அமைக்கவுள்ளது.
376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக அமையும் இந்தக் கட்டிடப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்டதாக இந்தக் கட்டிடம் கட்டப்படவுள்ளது.
THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.
Related posts:
இபோசபையின் விசேட பேருந்து சேவை, இன்றுமுதல் மேலும் அதிகரிக்கப்பு - இலங்கை போக்குவரத்துச் சபை சபையின்...
70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குற...
அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


