யாழ் பல்கலையில் 1706 பேருக்கு வெள்ளியன்று பட்டம்!
Wednesday, June 6th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசிபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் வேந்தா பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
07 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலை, மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் மற்றும் பட்டப்பின் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த ஆயிரத்து 223 உள்வாரிப் பட்டதாரிகளும், 43 டிப்ளோமா தாரிகளும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கவுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 440 வெளிவாரிப் பட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுமுள்ளன.
மொத்தமாக இம்முறை ஆயிரத்து 706 பட்டங்கள் வழங்கப்படவிருப்பதோடு சகல கற்கை நெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும் 48 பரிசில்கள் மற்றும் புலமைப் பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106