தேங்காயின் விலை வீழ்ச்சி!
Monday, June 4th, 2018
நாட்டின் காலநிலை தற்போது வழமைக்கு திரும்புகின்றமையால் தேங்காயின் விலை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபிலயகந்தவல தெரிவித்துள்ளார்.
45 ரூபா முதல் 65 ரூபா வரை தேங்காயின் விலை வீழ்ச்சி அடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருட நடுப்பகுதி முதல் தேங்காயின் விலை 75 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேங்காய் அறுவடை எதிர்பார்த்த நிலையை எட்டியுள்ளமை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தேங்காய் போதிய அளவில் இருப்பதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியாக வருடாந்தம் 260 முதல் 270 கோடி வரை தேங்காய் பெறப்படுகிறது. எனினும் கடந்த வருடத்தில் 240 கோடி தேங்காய் மட்டுமே பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
விவசாய அபிவிருத்திக்கு 160 வேலைத் திட்டங்கள்!
கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் 5 ஆவது மரணமும் பதிவானது!
அதிகபட்ச விலைக் காட்சிப்படுத்தவது கட்டாயம் - இல்லையேல் சட்ட நடவடிக்கை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ அ...
|
|
|


