கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது – காரணம் என்ன?

Friday, June 1st, 2018

ஓமான் – மஸ்கட்  விமானநிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை பெய்த அடை மழை காரணமாக குறித்த விமானத்தை மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கக்பபடுகின்றது. அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் 5.20 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அதன் பின்னர் காலை 6.30 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 6.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானத்தில் 130 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நீர் மின் உற்பத்தி 60 சதவீதமாக அதிகரிப்பு - சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும்...
பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் - பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள...
அதிகூடிய வெப்பநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்’ - சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி ...