துருக்கியில் கார்க்குண்டுத் தாக்குதல்! 37 பேர் பலி
Tuesday, March 15th, 2016
துருக்கிய தலைநகர் அங்காராவில் சனசந்தடி மிக்க சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள பஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தற்கொலைக் கார் குண்டு வெடிப்பில் குறைந்தது 37 பேர் பலியானதுடன் 125 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவரும் பலியாகியுள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இந்தக் கார் குண்டுத் தாக்குதலுக்கு அந் நாட்டு ஜனாதிபதி தாயிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார்.
மேற்படி தாக்குதலு க்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமைகோரவில்லை என்ற போதும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களே காரணம் என நம்பப்படுகிறது.
கிஸிலே சதுக்கத்துக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தில் இடம் பெற்ற இந்தத் தாக்குதலானது ஒரு மாதத்துக்கும் குறைந்த காலப் பகுதியில் அந்நாட்டு தலைநகரில் இடம்பெறும் இரண்டாவது பாரிய தாக்குதலாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இராணுவத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் உயிரிழந்திருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு குர்திஷ் தொழிலாளர் கட்சி இயக்கத்தின் ஒரு பிரிவு உரிமை கோரியிருந்தது.
இந்நிலையில் பிந்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலையொட்டி 11 துருக்கிய போர் விமானங்கள் ஈராக்கிலுள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளன. இதன்போது கிளர்ச்சியாளர்களின் ஆயு தக் களஞ்சியசாலை உட்பட 18 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் தென் கிழக்கு துருக்கியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பாதுகாப்பு நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அந்தப் பிராந்தியத்திலுள்ள பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106
Stack trace:
#0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require()
#1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array)
#2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array)
#3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '')
#4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...')
#5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...')
#6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...')
#7 {main}
thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106