காலநிலை சீர்கேடு;  டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு!

Tuesday, May 29th, 2018

2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆறு இலட்சத்து 80 ஆயிரம் சுற்றாடல் பகுதிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகதேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.

இவற்றில் சுமார் 50 சதவீதமான சுற்றாடல் பகுதிகள் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழைக்குப் பின்னர், மீண்டும் டெங்குநுளம்பு பெருகக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் விழிப்புடன் தமது சுற்றாடல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

மழைக்குப் பின்னர், கிணற்றை குளோரினிட்டு சுத்தம் செய்யவேண்டும். இதற்காக பொதுமக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தொற்றுநோய்ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் அனில் திசாநாயக்க குறிப்பிட்டார்.

மேலும் கொதித்தாறிய நீரை அருந்த வேண்டும். அதேபோன்று, காய்கறி மற்றும் பழ வகைகளை சுத்தப்படுத்தி, சமையலுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts:

உடுவில் மகளிர் கல்லூரி சம்பவங்கள் மன வேதனைக்குரியது- யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்பு...
இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈ...
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி - அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள்...

பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சு நடவடிக்கை!
பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை - எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதக...
உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா - அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி!