நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியில் அஞ்சலோ மத்தீவ்ஸ்!
Tuesday, May 22nd, 2018
இலங்கை கிரிக்கட் அணி கண்டியில் நடத்திய பயிற்சி முகாம் குறித்து, இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் திருப்தி வெளியிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் நிமித்தம் இலங்கை கிரிக்கட் அணி ஒருவார கால பயிற்சி முகாமை கண்டியில் நடத்தியது.
மழை காரணமாக இரவு வேளை பயிற்சிகளைப் பெற முடியாதிருந்த போதும், இந்த பயிற்சிகள் ஊடாக முக்கியமான பல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டதாக மெத்தீவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதற்கு முன்னர் தாம் மேற்கிந்திய தீவுகளில் விளையாடியுள்ள போதும், முதல்முறையாக அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அந்த தருணத்துக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் !
முன் அறிவித்தல் ஏதும் இன்றி உதைபந்தாட்ட போட்டிக்குத் தடை: பெற்றோர் குற்றம் சாட்டு!
சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஜெர்மனி வீரர் மெசுட் ஒசில் ஓய்வு!
|
|
|


