எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீர் சோதனை!
Wednesday, May 16th, 2018
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாகச் சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை திடீர்ச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பத்து நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாணந்துறை, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளில் மோசடி இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.
Related posts:
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கலந்துரையாடல்!
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு - தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி...
அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை மீண்டும் ஆரம்பம் !
|
|
|


