மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

Thursday, May 10th, 2018

இந்த நாட்டில் நீங்கள் கூறுவதைப் போன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ, தேசிய நல்லிணக்கமோ ஏற்பட வேண்டுமாயின், முதலில் புறையோடிப் போயிருக்கின்ற சில பழக்க, வழக்கங்களை மாற்றுங்கள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற மேற்படி கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு முன்வாருங்கள். இதற்குத் தயாராக இல்லையேல், ஒரு விஷேட நீதிமன்ற ஏறபாடுகளை மேற்கொண்டு, இந்த வழக்குகளை விசாரித்து ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இதனை ஓர் அரசியல் முதலீடாக தொடரந்து வைத்துக் கொண்டிருக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு தொடர்ந்து பல்வேறு அநீதிகள், முறைகேடுகள் இழைக்கப்படுவதாகவும், அங்கு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் வவுனியா நீதிமன்றத்தில்  கைதியொருவர் பதில் நீதவான் அவர்கள் முன்னிலையில் தெரிவித்திருப்பதாக தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவிரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யா...
ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வேண்...
கடற்றொழில் திணைக்களத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேலும் விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ்...

எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் - பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவான...
தடைசெய்யப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் - சாணக்கியனுக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!
நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கரு...