வருடாந்தம் 5000 பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!
Monday, June 13th, 2016
இலங்கையில் வருடமொன்றிட்கு 5000 சிறுநீரக நோயாளர்கள் புதிதாக இணங்காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோயிற்கு பிரதான காரணம் சுத்தமற்ற குடிநீர் என்பதால், இந்த குடிநீர்பிரச்சினையை ஒருவருடத்திற்குள் முற்றாக தீர்ப்பதற்கு நடவடிக்கைஎடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த குடிநீர் பிரச்சினைக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்புகள் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – கெலேபோகஸ்வௌ பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும்நோக்குடன் அமைக்கப்பட்ட புதிய நீர் வடிகட்டும் இயந்திரத்தை நேற்றைய தினம்திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!
அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்...
எரிபொருள் நெருக்கடி - தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி!
|
|
|


