வடக்கில் கடும் வெப்பம் – அச்சத்தில் மக்கள்!
Friday, May 4th, 2018
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்று வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும், அதனை தொடர்ந்து வெப்ப நிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப காலநிலையின் போது கூடுதலாக நீரை பருகுவது முக்கியமானதாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வறட்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இராணுவ உதவி - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
முன்னாள் ஜனாதிபதியின் தங்கை காலமானார்!
4 மணி நேர நடவடிக்கை - 5,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் -பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்!
|
|
|


