32 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!
Monday, April 30th, 2018
வவுனியா மாவட்டத்தில் உள்ள 32 வியாபார நிலையங்களுக்கு எதிராக மாவட்ட பொதுசுகாதார அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 19 உணவகங்களும், 6 அத்தியாவசிய பொருள் அங்காடிகளும், 4 மருந்தகங்களும், 3 சிறப்பு அங்காடிகளும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்குகள் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில் உணவு உற்பத்தி செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, களஞ்சியங்களில் பழுதடைந்தபண்டங்களுடன் வியாபார பொருட்களை களஞ்சியப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முடக்கப்படாது - மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இரா...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை - இலங்கைக்கான இந்திய உயர் ஸ...
|
|
|


