மரக்கறிச் செய்கை விவசாயிகளுக்கு நிவாரணம்!
Tuesday, May 1st, 2018
மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது உலர் வலய மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை கண்டறிவதற்காககவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தக்காளி, பூசனி, வெள்ளரி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் உலர் வலய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில்அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்த மரக்கறி வகைகளை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கும் முறை குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை ஜனாதிபதி விஜயம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும்- இந்தியா!
யாழ். நகர அபிவிருத்தித் திட்டத்தில் விரைவில் வீதிகள் சீரமைப்பு !
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஏற்பாடு!
|
|
|


