அமரர் கபிரியல் ஞானசீலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !
Thursday, April 26th, 2018
காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
இலக்கம் 59, அரசவடிசாலை, குருநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வசந்தன் மற்றும் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான இளங்கோ (றீகன்) ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்..
காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலன் தோழர் வவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதேசங்களினது அபிவிருத்திக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வ...
ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உண்டு - ஊர்காவற்றுறை பிரதேச ...
யாழ் மாநகர கழிவகற்றல் பிரச்சினைக்கு திருப்திகரமான நடவடிக்கை இல்லை - ஈ.பி.டி.பி. கூட்டத்தில் விசனம்
|
|
|



