பேருந்து குடைசாய்ந்து விபத்து – வடகொரியாவில் 36 சுற்றுலாப் பயணிகள் பலி!
வட கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 36 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேரூந்து குடைசாய்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில் 32 பேர் சீனர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வடகொரியாவைச் சேர்ந்தவர்கள். என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே வட கொரியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீதமானவர்கள் சீனர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருடாந்தம் ஒரு லட்சம் வெளிநாட்டவர்கள் வட கொரியாவிற்கு விஜயம் செய்வதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
Related posts:
உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தியின் மரணம் - 3 பேருக்கு 125 ஆண்டு சிறை!
கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா" – எச்சரிக்கின்றார் உல...
புலிகள் அமைப்புக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: - இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
|
|
|


