யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை!

Tuesday, April 17th, 2018

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அளவெட்டி, மகாத்மா வீதியில் உள்ள வீட்டுக்குள் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்புத் துணி கட்டியவாறு நுழைந்த 3 கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில்இருந்தவர்களை சத்தம் போடக் கூடாது என மிரட்டி 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது மிளகாய்த் தூளை வீடு முழுவதும் தூவி விட்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தெல்லிப்பளை பொலிஸார் சென்றதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts:

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் முதியவரின் சடலம்: பொறுப்பேற்குமாறு கோரிக்கை
அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவி...
பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் - சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமை...

இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது ...
நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசு தயார் - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்க...