எதிர்வரும் 20 ஆம் திகதி வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை!
Wednesday, April 18th, 2018
இம்முறை தமிழ் – சிங்கள புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்பட்டமையினால் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை அரை நாள் வங்கி விடுமுறையாகஇலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன் காரணமாக 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலும் மதியம் 12.00 மணிக்கு நிறைவுக்கு வரும். இது குறித்து கொழும்பு பங்குச் சந்தையின் பிரதானஒழுங்குமுறை அதிகாரி தரகு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த அரை நாள் விடுமுறை வங்கிகளுக்கு மாத்திரமே தவிர வேறு எந்தவொரு அரச நிறுவனங்களுக்கோ அல்லது வியாபார நிலையங்களுக்கோ பொதுவான விடுமுறை அல்ல எனவும்தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் - இராஜாங்க ...
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்க...
|
|
|


