சிறை கலவரத்தினால் 7 கைதிகள் உயிரிழப்பு!

Tuesday, April 17th, 2018

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் லீசி என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் 2 பிரிவுகளாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறையில் குறைந்த அளவு காவலர்களே இருந்தனர்.அவர்கள் கலவரத்தை அடக்க தீவிர முயற்சி மேற்கொண்ட போதும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

கைதிகள் ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினர். இக்கலவரத்தில் சிறைக்கைதிகள் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயம்அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்திற்கான காரணம் தெரியாத நிலையில் கலவரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அமெரிக்க சிறைகளில் கைதிகளுக்கு இடையே முன்னர் இத்தகைய கொடூரமான வன்முறை தாக்குதல்கள் நடைபெறாததால் இக்கலவரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: