சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!

Tuesday, March 27th, 2018

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நிதி அமைச்சில் இன்று(27) நடைபெறவுள்ள வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனம் எரிவாயுவின் விலையை 270 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற வாழ்க்கை்செலவுக்கூட்டத்தில் 175 ரூபாவால் சமையல் எரிவாயுவை அதிகரிக்க முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் இது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

இதேவேளை, அரசாங்கத்திடம் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று(27) கூடவுள்ள வாழ்க்கைச் செலவுக்குழு கூட்டத்தில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்தும் பால்மா விலை அதிகரிப்பு குறித்தும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Related posts:

உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
சிவப்பு வலயத்திலிருந்து இலங்கை மீள மேலும் ஒரு வாரகாலமாவது தேவை - எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி ...