நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவிகள் விடுவிப்பு!
Monday, March 26th, 2018
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியான யோபோ பிராந்தியத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் சுமார் 100 பேர் போகோ ஹராம் தீவிரவாதிகளால்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் தாங்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல மாட்டோம் என்று அளித்த வாக்குறுதியின் பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை விடுவிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ராம்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
அதிக நேரம் பணியாற்றுவது உயிராபத்தை ஏற்படுத்தும்! - உலக சுகாதார ஸ்தாபனம்
இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ...
|
|
|


