கைத் தொலைபேசி திருடிய சந்தேகநபர் ஒரு மாதம் கடந்த நிலையில் கைது!
Thursday, June 9th, 2016
பண்டத்தரிப்புச் சாந்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி உள்நுழைந்து 16 ஆயிரத்து 550 ரூபா பெறுமதியான கைத் தொலைபேசியினைத் திருடிய சந்தேகத்தில் சந்தேகநபரொருவரை ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று-08 ஆம் திகதி புதன் கிழமை இளவாலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம்- 08 ஆம் திகதி பண்டத்தரிப்புச் சாந்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் அங்குள்ள மேசையில் வைக்கப்பட்டிருந்த கைத் தொலைபேசியினைத் திருடியிருந்தார். சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் மறுநாள் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 30 வயதான சந்தேகநபரை நேற்றுக் கைது செய்தனர்.
Related posts:
இலங்கை- இந்தியா இடையே விரைவில் பாலம்!
இன்றிலிருந்து மேலும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – வாநிலை அவதான நிலையம்!
எதிர்வரும் திங்கள் கட்சித் தலைவர் கூட்டம்!
|
|
|
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் - தேர்தல்கள் ஆணைக்கு...
வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை - மின்சக்...
வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் ஜனவரி 5 முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் –வவுனிய...


