இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்ட பின் பேருந்து சேவை சீராகும் !

Friday, March 23rd, 2018

இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது அதன் பின்னர் போக்குவரத்து சீராக இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வி.பத்மநாதன் தெரிவித்தார் மருதங்கேணிப் பிரதேச செயலக ஒருங்கினைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் இடம் பெற்றது .

இதன்போது போக்குவரத்துத் தொடர்பான விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது தனியார் போக்குவரத்துத் துறையினர் சீராக சேவையில் ஈடுபடுவதில்லை என பொதுமகன் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டது இதன்போது தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரான வி.பத்மநாதன் கருத்து வெளியிடப்பட்ட போது : இ.போ.சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபையினர் ஆகியோரிற்கான இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படுகின்றது .

அதாவது 60:40 என்ற விகிதத்தில் அது தயாரிக்கப் படுகின்றது அதன் பின்னர் சீரான போக்குவரத்து இடம் பெறும் எனத் தெரிவித்தார்.

Related posts:


ஊடக கண்காட்சிகளை நடத்தி ஜனாதிபதியாகவில்லை. வேலை செய்தே ஜனாதிபதி – ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு!
தனியார் பல்கலைக்கழகங்களின் தரநிலைகள் தொடர்பில் ஒழுங்குப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது -...
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்ததால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும...