மாணவியைக் காணவில்லை: சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Thursday, June 9th, 2016
க. பொ. த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கடந்த-6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
திங்கட்கிழமை மாலை குறித்த மாணவி மேலதிக வகுப்புக்காகச் சென்று இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இரவு- 11 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச...
நாளை காலை 5 மணிவரை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு நட்டம் அமுல்!
வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு - சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என இராஜாங்க அம...
|
|
|


