அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை?
Sunday, March 18th, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே அவருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் சிங்கபூரில் வசிப்பதாக கூறப்படுகின்ற நிலையில், இலங்கை பொலிஸாரின் சர்வதேச பிரிவின் ஊடாக அவருக்கான பிடிவிராந்து உத்தரவு இன்டர்போலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டத்திற்கு முரணாக வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!
கடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி!
வடபகுதி வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள் நியமனம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|
|


